உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காட்டு யானை தாக்கியதில் பெண் பலி

காட்டு யானை தாக்கியதில் பெண் பலி

ஹாசன்: மாடு மேய்க்க சென்ற பெண், காட்டு யானை தாக்கி பலியானார். ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகா சவுடனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ஜெயம்மா, 48. இவர், நேற்று முன்தினம் மாலை, இதே கிராமத்தின் அருகில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, அவரை கீழே தள்ளி, காலால் மிதித்து கொன்றது. காட்டு யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை, ஜெயம்மாவின் உடலை எடுக்க விட மாட்டோம் என கூறி, கிராம மக்கள் இரவு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி