மேலும் செய்திகள்
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
18-Oct-2025
ஜே.பி.நகர்: திருட்டு வழக்கில் கைதான பெண்ணின் பெயரில், வீட்டின் உரிமையாளர், வீடு உட்பட 5 கோடி ரூபாய்க்கு சொத்து எழுதி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. பெங்களூரு, ஜே.பி.நகர் 2வது ஸ்டேஜில் வசிப்பவர் ஆஷா ஜாதவ், 58. இவரது வீட்டில் திருடியதாக வேலைக்கார பெண் மங்களா, 32, கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் மங்களாவை, தன் மகளை போல ஆஷா பார்த்தது தெரிய வந்துள்ளது. வயோதிகம், உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த, தன் தாயை கவனித்துக் கொள்ள, 15 ஆண்டுக்கு முன், மங்களாவை, 32, ஆஷா வேலைக்கு சேர்த்திருந்தார். தன் தாயை நன்கு கவனித்துக் கொண்டதால், மங்களா மீது ஆஷாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தாய் இறந்த பின்னரும் அவரை வேலைக்கு வைத்திருந்தார். தனக்கு பிள்ளைகள் இல்லாததால், மங்களாவை மகள் போல நடத்தினார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதுடன், நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யவும் நினைத்து இருந்தார். மங்களாவின் பெயரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, வீட்டையும், 3.50 கோடி ரூபாய்க்கு சொத்தையும், ஆஷா பெயரில் எழுதிக் கொடுத்தார். இதற்கிடையில் காதலனுடன் சேர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மங்களாவுக்கு 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அந்த கடனையும் ஆஷா தான் அடைத்தார். ஆனாலும் சூதாட்ட மோகத்தால் தன் பெயரில் எழுதப்பட்ட வீட்டையும் விற்று, அதில் கிடைத்த பணத்தையும் மங்களா இழந்தார். ஆனாலும் ஆஷா கோபம் கொள்ளவில்லை. இந்நிலையில் வீட்டின் பீரோ சாவியை எடுத்த, மங்களா பீரோவில் இருந்த 450 கிராம் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி பொருட்களை திருடி விற்றார். சாவியை எங்கேயோ துாக்கி வீசினார். தீபாவளி பண்டிகையின்போது, மாற்று சாவியை பயன்படுத்தி, ஆஷா பீரோவை திறந்து பார்த்தபோது நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது. போலீசில் புகார் அளித்தார். மங்களா மீது சந்தேகப்பட்டு போலீசார் விசாரித்தபோது, 'அவள் என் மகளை போன்றவர். அவளிடம் விசாரிக்க வேண்டாம்' என்றே ஆஷா கூறி உள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் மங்களா கைது செய்யப்பட்டதால், ஆஷா மனம் உடைந்துள்ளார்.
18-Oct-2025