உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரானைட் குவாரியில் தொழிலாளி பலி

கிரானைட் குவாரியில் தொழிலாளி பலி

ராய்ச்சூர் : ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூரின், மாகாபுரா கிராமத்தின் அருகில், கிரானைட் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெடிமருந்துகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது வெடி பொருள் வெடித்ததில், பலத்த காயமடைந்த வெங்கடேஷ், 38, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.இவர் பாகல்கோட் மாவட்டம், இளகல்லை சேர்ந்தவர். கொப்பாலின், குஷ்டகியை சேர்ந்த மஹாலிங்கா காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.தகவல் அறிந்து அங்கு வந்த முதகல் போலீசார் விசாரணையில் இந்த கிரானைட் குவாரி, முறைப்படி லைசென்ஸ் பெறாமல், சட்டவிரோதமாக இயங்குவது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை