உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

சித்ரதுர்கா: திருமணம் செய்து கொள்ள, பெண் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு தாலுகாவின், ஜே.பி.ஹள்ளி கிராமத்தில் வசித்தவர் திருமலா, 31. இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றினார். இவருக்கு திருமணம் செய்ய விரும்பிய பெற்றோர், பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.சமீபத்தில் மூன்று இடங்களில் பெண் பார்த்து வந்தனர். எந்த பெண்ணும், அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. வேறு இடத்தில் பெண் தேடலாம் என, பெற்றோர் சமாதானம் செய்தனர். ஆனால் மனம் நொந்த திருமலா, நேற்று மாலை தன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.ராம்புரா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை