உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / எளிதாகும் திவால் நடைமுறை

எளிதாகும் திவால் நடைமுறை

'சட்ட தீர்ப்பாயங்களை வலுப்படுத்த, ஐ.பி.சி., எனும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை மற்றும் திவாலாதல் விதிமுறையில் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்' என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஐ.பி.சி., வாயிலாக தீர்வுகள் கிடைப்பதை மேம்படுத்த, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் உருவாக்கப்படும் என்றும்; கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐ.பி.சி., வாயிலாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடன் வழங்கியவர்களுக்கு கிட்டத்தட்ட 3.30 லட்சம் கோடி ரூபாய் மீட்டுத் தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், உற்பத்தித்திறன் ஆதாயங்கள், வணிக வாய்ப்புகள் மற்றும் தனியார் துறையின் கண்டுபிடிப்புகளுக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ