இந்தியாவில் ரூ.3.15 லட்சம் கோடி முதலீட்டுக்கு அமேசான் திட்டம்
புதுடில்லி: அமேசான் நிறுவனம், வரும் 2030க்குள், இந்தியாவில் 3.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குயிக் காமர்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் தன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக அமேசான் கூறியுள்ளது. நேற்று முன்தினம், இந்தியாவின் ஏ.ஐ., கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 1.58 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; அதே நேரத்தில் வியாபாரிகளின் ஏற்றுமதி தற்போதுள்ள 1.80 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 7.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.