உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்

 கிண்டியில் 12 மாடி கட்டடம் கட்டுகிறது சோழமண்டலம்

சென்னை: சென்னை கிண்டியில், 1,068 கோடி ரூபாய் செலவில், 12 மாடிகள் கொண்ட கட்டடத்தை கட்டுவதற்கு, முருகப்பா குழுமத்தின் வங்கி சாராத நிதிச்சேவை பிரிவான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ் முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள புதிய கட்டடத்தில் 13,726 பேர் வரை பணிபுரிய முடியும். இதனுடன், மூன்று மாடிகள் கொண்ட இணைப்பு கட்டடமும் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 22,484 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில், 2,700 இருசக்கர வாகனங்கள், 1,300 கார்களை பார்க்கிங் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2024 மார்ச்சில் டி.எல்.எப்.,நிறுவனத்திடம் இருந்து 735 கோடி ரூபாய்க்கு நிலத்தை சோழமண்டலம் பைனான்ஸ் வாங்கி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை