உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பண்டிகை கால மிகை செலவில் இருந்து மீள்வது எப்படி?

பண்டிகை கால மிகை செலவில் இருந்து மீள்வது எப்படி?

ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய தீபாவளி பண்டிகை முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறோம். பண்டிகை கால கொண்டாட்டத்தை மீறி, பலரும் எதிர்பார்த்ததை விட அதிக செலவு செய்ததை உணர்ந்திருக்கலாம். திட்டமிட்டதை விட கூடுதலாக செய்த செலவு கடன் சுமையாக அமைந்து மேலும் சிக்கலையும் உண்டாக்கியிருக்கலாம். எனினும், இதை நினைத்து வருந்துவதை விட, நிதி நிலையை ஆய்வு செய்து, மிகை செலவில் இருந்து மீண்டு வருவதற்கான மற்றும் ஆரோக்கியமான செலவு பழக்கங்களை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான வழிகளை பார்க்கலாம்.

நிதி தாக்கம்:

தீபாவளி செலவுகள் ஏற்படுத்திய நிதி தாக்கத்தை அறிவதில் இருந்து துவங்கலாம். தீபாவளிக்காக மேற்கொண்ட எல்லா செலவுகளையும் பட்டியலிட்டு, அதற்கான தொகையை கணக்கிட வேண்டும். பரிசுப்பொருட்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளும் அடங்கும். பட்ஜெட்டை மீறி அமைந்த தொகையை அறிய இது உதவும்.

மீளும் வழிகள்:

பண்டிகை கால செலவுகளை கணக்கிட்ட பிறகு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். செலவுகளை குறைப்பது ஒரு வழி. தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். அடுத்த சில மாதங்களுக்கேனும், வெளி உணவு, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

சீரான வேகம்:

அதிரடி நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்வதை வீட, சீரான முன்னேற்றம் அவசியம். ஏனெனில் செலவு குறைப்பு நடவடிக்கைகள் பின்பற்ற முடியாத கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. செலவுகளுக்காக கடன் வாங்கியிருந்தால் அதை அடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கூடுதல் வருமானம்:

செலவுகளை குறைப்பதோடு வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும் ஆராய வேண்டும். தீபாவளி செலவுகளுக்கு அளிக்கப்பட்ட கேஷ்பேக் சலுகைகள் இருந்தால், அவற்றை மாதாந்திர தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். செலவில்லாத வார விடுமுறை போன்றவற்றை பின்பற்றலாம்.

பண்டிகை நிதி:

முக்கியமாக அடுத்த தீபாவளிக்கு மீண்டும் இதே போன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க பண்டிகை கால நிதியை உண்டாக்கி கொள்ள வேண்டும். பண்டிகை கால பட்ஜெட்டை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப செலவிடவும்இது உதவும். நிதி பாதிப்பில் இருந்து மீள்வது உற்சாகத்தை அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை