உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா ராயல்டி கட்டணம் ரூ.200 கோடியாக உயர்வு

டாடா ராயல்டி கட்டணம் ரூ.200 கோடியாக உயர்வு

புதுடில்லி:'டாடா சன்ஸ்' நிறுவனம், தன் ராயல்டி கட்டணத்தை, இரண்டு மடங்கு அதிகரித்து, 200 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.டாடா நிறுவனத்தின் பெயரை அக்குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதற்கு, 100 கோடி ரூபாயை ராயல்டி கட்டணமாக அதன் உரிமையாளர்களான டாடா சன்ஸ் நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், இந்த கட்டணத்தை இரு மடங்காக அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் அடிப்படையில், இனி டாடா பெயரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், 200 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து, 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்' உள்ளிட்ட பல நிறுவனங்கள், இதுவரை செலுத்தி வந்த ராயல்டி கட்டணத்தை இனி இருமடங்காக செலுத்த வேண்டியதிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ