உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க மந்தநிலை சூழலே தற்போது கவலை தருகிறது நிதியமைச்சக அதிகாரிகள் கருத்து

அமெரிக்க மந்தநிலை சூழலே தற்போது கவலை தருகிறது நிதியமைச்சக அதிகாரிகள் கருத்து

புதுடில்லி:அமெரிக்காவில் நிலவும் மந்தநிலை போன்ற சூழலே, தற்போது பெரிய ஆபத்தாக தென்படுவதாக, மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:'ஹமாஸ்' அமைப்பின் தலைவர் கடந்த வாரம் ஈரானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலை, நிதியமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அங்கு நடைபெறும் மோதலால், உலகளவில் எண்ணெய் விலை, மூலதன வரத்து, நாணயங்களின் மதிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து செலவு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இவை இந்திய பொருளாதாரத்துக்கு பெரியளவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உள்நாட்டு பொருளாதாரம் வலுவாக இருப்பதால், நாடு எந்த வித தாக்கத்தையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் தற்போது மந்தநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளதே, மிகவும் கவலை தருவதாக உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் மந்தநிலை ஏற்பட்டால், அது நமது வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், தற்போது இதுகுறித்து எதுவும் உறுதியாக கூற முடியாது.இவ்வாறு தெரிவித்தார்.கடந்த நிதியாண்டில் மட்டும் 6.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளன. இது மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை