உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 17 வன்பொருள் நிறுவனங்கள் பி.எல்.ஐ., திட்டத்தில் ரெடி

17 வன்பொருள் நிறுவனங்கள் பி.எல்.ஐ., திட்டத்தில் ரெடி

பரிதாபாத்:ஐ.டி., வன்பொருள் தயாரிப்புக்கான, புதிய உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள், இந்த ஆண்டு தங்கள் உற்பத்தியை துவங்கு வர் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையின் 'பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்' உள்ளிட்ட வன்பொருட்கள் உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 27 நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. இவற்றில் ஆறு முதல் ஏழு நிறுவனங்கள், கடந்த ஆண்டு தங்கள் உற்பத்தியை துவங்கின. 17 நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கள் உற்பத்தியை துவக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு நிறுவனங்கள், அடுத்த ஆண்டில் உற்பத்தியை துவக்கும். அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் குறிப்பாக, 'பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், வி.வி.டி.என்., ஆப்டிமஸ்' போன்ற முக்கிய நிறுவனங்கள் இதில் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை