உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.4,980 கோடி கடன் பெற வங்கிகளை நாடும் அதானி

ரூ.4,980 கோடி கடன் பெற வங்கிகளை நாடும் அதானி

புதுடில்லி : அதானி காஸ் நிறுவனம், 4,980 கோடி ரூபாய் கடன் திரட்ட, சர்வதேச வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அதானி நிறுவனம், தற்போதுள்ள கடன்களை நிர்வகிக்கும் பொருட்டு, சர்வதேச வங்கிகளிடம் இருந்து 4,980 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான பேச்சில் ஈடுபட்டு வருகிறது. 'அதானி டோட்டல்' நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 'தாம்ரா எல்.என்.ஜி., டெர்மினல்' நிறுவனத்தின் வாயிலாக, இந்த கடன் திரட்டப்பட உள்ளதாக தெரிகிறது.கடனுக்கான தவணைக்காலம் 3 முதல் 5 ஆண்டுகளாக இருக்கலாம். இந்த கடன் நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்படலாம்.இக்கடன்களுக்காக, 'கிரேடிட் அக்ரிகோல், டி.பி.எஸ்., வங்கி, பி.என்.பி., பரிபாஸ், மிட்சுபிஷி யு.எப்.ஜே., பைனான்சியல் குரூப், மிஷுஹோ பைனான்ஸ்' உள்ளிட்ட பல வங்கிகளுடன் அதானி குழுமம் தற்போது விவாதித்து வருகிறது.கடந்த ஆண்டு, ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் ஏற்பட்ட நெருக்கடிக்கு பின், தங்கள் குழுமத்தின் மீதான நம்பிக்கையை, மீண்டும் முதலீட்டாளர்களிடையே மீட்டெடுக்கும் நோக்கில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி