உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8.51 லட்சம் கோடியை எட்டிய ஆதித்ய பிர்லா

ரூ.8.51 லட்சம் கோடியை எட்டிய ஆதித்ய பிர்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'அல்ட்ராடெக் சிமென்ட், ஆதித்ய பிர்லா கேபிட்டல், வோடபோன் ஐடியா' போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு, நேற்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில், 100 பில்லியன் டாலர் அதாவது 8.30 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, 8.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இக்குழுமத்தின் கீழ் உள்ள 'கிராசிம்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மூன்று ஆண்டு களில், இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல், 'ஹிண்டால்கோ' நிறுவனத்தின் மதிப்பு, இரண்டு ஆண்டுகளில், இரு மடங்கு அதிகரித்து உள்ளது.வோடபோன் ஐடியா, 'செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனங்களின் சந்தை மதிப்பு, கடந்த ஓராண்டில், மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்