உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / விக்சித் பாரத் கொள்கையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்திய அமேசான்

விக்சித் பாரத் கொள்கையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்திய அமேசான்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைகளுள் ஒன்றான 'விக்சித் பாரத்' கொள்கையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் 'ஸ்பவ் உச்சி மாநாட்டின்' 5வது எடிஷனை வெற்றிகரமாக நடத்தியது.அமேசான் நிறுவனமானது வருடாந்திர 'ஸ்பவ் உச்சி மாநாட்டின்' ஐந்தாவது எடிஷனை வெற்றிகரமாக நடத்தியது. அதோடு, 'விக்சித் பாரத்' கொள்கையின் இந்தியா மீதான உறுதிப்பாட்டை சான்றாக இந்நிகழ்வு அமைந்தது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வளர்ச்சி விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் சிறு வணிகங்களைக் கொண்டாடவும், ஆதரிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அமேசானின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஸ்பவ் உச்சி மாநாடு அமைந்தது.இதன் ஒரு பகுதியாக, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான அரசின் முக்கிய இலக்கினை எட்டுவதற்கு அமேசான் DPIIT உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியை டிஜிட்டல் மயமாக்கி உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதற்காக அமேசான் தனது ஸ்பவ் வென்ச்சர் பண்ட்-லிருந்து 120 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. தவிர, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. அமேசான் தனது ஏற்றுமதி உறுதிப்பாட்டை நான்கு மடங்கு அதிகரித்து, 2030க்குள் இந்தியாவில் இருந்து 80 பில்லியன் டாலர்களுக்கு மேல் ஒட்டுமொத்த ஏற்றுமதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திய சிறு, குறு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் D2C ஸ்டார்ட்அப்களுக்கான அமேசான் குளோபல் விற்பனை நிகழ்ச்சி மூலம் ஏற்றுமதிகளை செயல்படுத்துவது மற்றும் அமேசானின் உலகளாவிய சந்தைகளில் விற்பனை செய்யப்படம் மேட்-இன்-இந்திய தயாரிப்புகளை அதிகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அமேசான் ஹோம் மற்றும் சமையலறை தயாரிப்புகள், ஆடைகள் மற்றும் ஜவுளிகள், பொம்மைகள், ஹெல்த் கேர் மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ், ஆயுர்வேத பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து ஏற்றுமதிகள் உலகளவில் தொடர்ந்து அதிகமாகும்.இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து பேசுகையில், ''விக்சித் பாரத் பற்றிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அனைத்து பங்குதாரர்களின் தீவிர பங்களிப்பு தேவைப்படுகிறது. உற்பத்தி, ஏஐ மற்றும் ஏற்றுமதியில் அமேசானின் முயற்சிகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன. இந்தியா முழுவதும் அதன் லாஜிஸ்டிக் நிபுணத்துவத்தை பயன்படுத்த அமேசானின் முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். நகர்ப்புற மையங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு வணிகங்களை மேம்படுத்துகிறோம். தனியார் துறையின் இத்தகைய கூட்டு முயற்சிகள் புதுமைகளை ஊக்குவிப்பதிலும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும், லாஜிஸ்டிக் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார்.அமேசான் நிறுவனத்தின் வளர்ந்து வரும் சந்தைகளின் மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால் பேசுகையில், ''இந்தியாவில் அமேசானுக்கு வரவிருக்கும் வாய்ப்புளைப் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறேன். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக, இந்தியா அமேசானுக்கு ஒரு முக்கிய சந்தையாகும். மேலும் எங்கள் கவனம் செலுத்தும் பகுதிகள் அரசாங்கத்தின் பார்வை மற்றும் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் முன்னுரிமைகளுடன் நன்கு ஒத்துப்போகின்றன. இந்த முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பிரதமரின் விக்சித் பாரத் பார்வைக்கும் பங்களிப்பதை எதிர்நோக்குகிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை