உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நிறுவனம் முடக்கப்படும்: பைஜூ ரவீந்திரன்

திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நிறுவனம் முடக்கப்படும்: பைஜூ ரவீந்திரன்

புதுடில்லி:திவால் நடவடிக்கைகள் தொடர்ந்தால், 'பைஜூஸ்' நிறுவனம் முடக்கப்படும் சூழல் உருவாகும் என, அதன் தலைமைச் செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரன் தெரிவித்துஉள்ளார். ஏற்கனவே கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கல்விப் பயிற்சிகள் வழங்கும் பைஜூஸ் நிறுவனத்துக்கு, தற்போது மேலும் ஒரு பிரச்னை எழுந்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்து வந்த பைஜூஸ், கிட்டத்தட்ட 158 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்று கூறி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., புகார் அளித்திருந்தது. பி.சி.சி.ஐ., அளித்த புகாரின் பேரில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், பைஜூஸ் மீது திவால் நடவடிக்கையை துவங்கிஉள்ளது. இதற்கிடையே இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி, பைஜூ ரவீந்திரன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த நடவடிக்கைகள் காரணமாக, பைஜூஸ் ஆன்லைன் தளங்களை பராமரிக்க முக்கிய சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், அதனை நிறுத்தக்கூடும் என்றும், இது ஒட்டுமொத்த வணிகத்தையே முடக்க வழிவகை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மூன்று மாதத்துக்குள் பி.சி.சி.ஐ.,க்கு இந்த தொகையை செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

*

*கொரோனா காலகட்டத்தில் பிரபலமானது*21க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது*2022ல், நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி *2022 நிதியாண்டு இறுதியில், நிகர நஷ்டம் ரூ.8,300 கோடி*தற்போது ரவீந்திரன் சொத்து மதிப்பு பூஜ்ஜியம்* மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 27,000* ஆசிரியர்கள் மட்டும் 16,000

துவங்கப்பட்டது

பிரபலமானது

21க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது

2022ல், நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி

2022 நிதியாண்டு இறுதியில், நிகர நஷ்டம் ரூ.8,300 கோடி

தற்போது ரவீந்திரன் சொத்து மதிப்பு பூஜ்ஜியம்

மட்டும் 16,000

எண்ணிக்கை 27,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூலை 21, 2024 12:25

உங்கள் கடனை வாராக்கடன் வங்கிக்குள்ளே தள்ளி விட முடியுமான்னு அம்மா கிட்டே கேட்டுப்பாருங்க.


Barakat Ali
ஜூலை 21, 2024 10:44

ரவீந்திரன் பின்னணியில் யார் யார்?? இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்தின் பெயர் அடிபடவில்லையே.. ஏன்? ஐபிஓ வெளியிடப்போவதாகக் கேள்விப்பட்டேன் ..... செபி எப்படி அனுமதி வழங்கியது ?


victim of bijus
ஜூலை 21, 2024 08:07

கல்வி நிறுவனம் எனும் பெயரில் நடத்தப்படும் மிகப்பெரிய ஊழல். இலட்சகணக்கான பெற்றோர்களின் வயிற்றெறிச்சல் உன்ணை சிறையில் தள்ளும் உருதியாக.


Barakat Ali
ஜூலை 21, 2024 10:36

சார் எப்படி பாதிக்கப்பட்டிங்கோ ??


Aishwarya Aravind
ஜூலை 21, 2024 21:07

Rightly said !!!


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ