உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முத்ரா கடன் திட்டத்தில் ரூ.5 லட்சம் கோடி வழங்கல்

முத்ரா கடன் திட்டத்தில் ரூ.5 லட்சம் கோடி வழங்கல்

ஹைதராபாத் : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023 - 24ம் நிதியாண்டில், முத்ரா கடன்கள் திட்டத்தின் கீழ், 5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு சாதனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், சிறு வணிகங்களுக்கு 5.28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது முந்தைய நிதியாண்டில், 4.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த கடன்களுக்கான பயனாளிகளில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடன் திட்டம் 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் இருந்து, கடந்த நிதியாண்டுக்கான தற்காலிக புள்ளி விபரங்களையும் சேர்த்தால், இதுவரை, 46 லட்சம் கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது என, முத்ரா திட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.முத்ரா கடன்கள், 50,000 ரூபாய் வரையிலான கடன்கள் 'சிஷு' என்ற பிரிவிலும், 50,000 ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் 'கிஷோர்' என்ற பிரிவிலும், 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் 'தருண்' என்ற பிரிவிலும், வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை