உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் 16% சரிவு

பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் 16% சரிவு

புதுடில்லி : கடந்த ஏப்ரல் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 16 சதவீதம் சரிந்து, 18,917 கோடி ரூபாயாக இருந்தது என, 'ஆம்பி' எனும், இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 'லார்ஜ் கேப்' பண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு வெகுவாக சரிந்ததும்; தேர்தல் காலகட்டத்தால் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதுமே, இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.  பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடுகள் குறைந்த போதிலும், கடந்த மாதம் 'எஸ்.ஐ.பி.,' முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 20,000 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த மார்ச்சில் 19,271 கோடி ரூபாயாக இருந்த எஸ்.ஐ.பி., முதலீடு, ஏப்ரலில் 20,371 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியது எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் 8.70 கோடியை எட்டியது. கடந்த மாதம் மட்டும் புதிதாக 63.65 லட்சம் நபர்கள் பதிவு செய்துள்ளனர்  ஒட்டுமொத்தமாக ஏப்ரலில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாதமான மார்ச்சில், 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் திரும்பப்பெறப்பட்டன கடன் சார்ந்த திட்டங்களில், 1.90 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பபட்டதே, கடந்த மாதம் முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச்சில், 53.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சொத்து மதிப்பு, கடந்த மாதம் 57.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி