உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏற்றுமதி, இறக்குமதி தகவல்கள் இனி, ஒரு க்ளிக்கில் கிடைக்கும்

ஏற்றுமதி, இறக்குமதி தகவல்கள் இனி, ஒரு க்ளிக்கில் கிடைக்கும்

புதுடில்லி,:ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அனைத்து விபரங்களையும் கொண்ட, 'டிரேடு கனெக்ட்' என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு துவங்கிஉள்ளது.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இந்திய ஏற்றுமதியாளர்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில், புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. டிரேடு கனெக்ட் என்ற இந்த இணையதளம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சிறுதொழில் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்திய மையங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், அரசு துறைகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.ஏற்றுமதி தொடர்பாக உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் ஏற்படும் நன்மைகள், உலக வர்த்தகம் தொடர்பான புள்ளி விபரங்கள், தகவல்கள் இதில் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், புதிய இணையதளத்தை துவங்கி வைத்து, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:ஒரு 'க்ளிக்' வாயிலாக, ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தொடர்பான எல்லா தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெற முடியும். குறிப்பிட்ட காலக்கெடுவில் இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்த, பிரதமர் மோடி உத்தரவிட்டதன் பேரில், இப்போது இந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது.இவ்வாறு அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ