| ADDED : மே 22, 2024 11:09 PM
புதுடில்லி:வெங்காயத்திற்கான தடையை அரசு நீக்கிய பின், 45,000 டன் வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் நிதி கரே தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்தாண்டு டிசம்பரில், வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த மார்ச் வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 4ம் தேதி அதை அரசு விலக்கிக் கொண்டது. ஏற்றுமதிக்கான தடை நீக்கத்துக்கு பின், கிட்டத்தட்ட 45,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும், மத்திய கிழக்கு மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பருவமழை போதிய அளவில் பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பு, காரீப் பருவ வெங்காய விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.