மேலும் செய்திகள்
ஜோஹோ நிறுவனத்தின் பி.ஓ.எஸ்., சாதனம் அறிமுகம்
58 minutes ago
இந்தியா சுவிட்சர்லாந்து ரூ.86,000 கோடி வணிகம்
1 hour(s) ago
அதானி டிபென்ஸ் மீது வரி ஏய்ப்பு விசாரணை
1 hour(s) ago
சென்னை: உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு உணவு தொழில் பூங்காவை, தமிழக அரசு அமைக்க உள்ளது.தமிழக அரசு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிப்பது, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இதற்கான நிறுவனங்களுக்கு தேவையான தொழில்மனைகளை வழங்க, தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், உணவு தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளது. தற்போது திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையில், 8 கோடி ரூபாய் செலவில், 18.83 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. மேலும், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் உணவு தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி, 1,070 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெரு வழித்தடம், அமைக்க உள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களிலும் தலா ஒரு உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே, திருச்சியில் உணவு பூங்கா உள்ள நிலையில், திருவாரூரில் அமைக்கும் பணி நடக்கிறது. மற்ற மூன்று மாவட்டங்களில் உணவு பூங்காவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. நிலம் கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
58 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago