உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீனாவிலிருந்து இறக்குமதி 15.55 சதவீதம் உயர்வு

சீனாவிலிருந்து இறக்குமதி 15.55 சதவீதம் உயர்வு

புதுடில்லி:சீனாவிடம் இருந்து நம் நாட்டின் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 15.55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், சீனாவுக்கு ஏற்றுமதி 22.44 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 8,400 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி நடைபெற்றது. ஆனால், 90,700 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதியானதாக மத்திய வர்த்தக அமைச்சக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சீனாவுக்கான ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.30 சதவீதம் குறைந்துள்ளது. மாறாக, ஏற்றுமதி 10.96 சதவீதம் அதிகரித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 18, 2024 01:06

ஆத்மநிர்பாரும், தேஷ்பக்தியும் போட்டி போட்டிக் கொண்டு ஒசந்துக்கிட்டே போகுது. நமக்குத்தான் சீனப் பொருட்கள் வாணாம்னு உபதேசம். கார்பரேட்டுகள் குறைந்த வில்சியில் சீனாவிலிருந்து இறக்குமதி பண்ணி நமக்கு அதிக விலைக்கு விக்கிறாங்க. கேட்டா காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை சீன அடிமையேன்னு திட்டுவாங்க.


சமீபத்திய செய்தி