உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிமென்ட் விலை மூடை ஒன்றுக்கு ரூ.10 முதல் 15 வரை உயர்வு

சிமென்ட் விலை மூடை ஒன்றுக்கு ரூ.10 முதல் 15 வரை உயர்வு

புதுடில்லி:சிமென்ட்டின் தேவை குறைந்ததால், கடந்த சில மாதங்களாக விலை சரிவை கண்டிருந்த நிலையில், தற்போது சிமென்ட் நிறுவனங்கள், இந்தியா முழுதும் 50 கிலோ எடை கொண்ட மூடைக்கு, 10 முதல் 15 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளன. சிமென்ட் தேவை குறைந்ததன் காரணமாக, தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக அதன் விலையில் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலை உயர்வை அறிவித்துள்ளன. பெரிய சிமென்ட் நிறுவனங்கள், நாட்டின் வட பகுதியில் ஒரு மூடைக்கு, 10 முதல் 15 ரூபாய் வரையிலும், மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில், 30 முதல் 40 ரூபாய் வரையிலும், மேற்கு பகுதிகளில், 20 ரூபாய் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளதாக, சிமென்ட் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக தேவை குறைந்திருந்த போதிலும், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் தொழில் துறை மூலதன செலவுகள் ஆகியவற்றின் காரணமாக, நாட்டின் நீண்டகால வளர்ச்சி தொடரும் என சிமென்ட் வினியோகஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.பொதுத்தேர்தல்கள் காரணமாக, ஜூன் காலாண்டில் தேவை குறையக் கூடும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை