உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து வெளியேறுகிறார் மெலிண்டா

கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து வெளியேறுகிறார் மெலிண்டா

புதுடில்லி:'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' அறக்கட்டளையில் இருந்து, வெளியேறுவதாக மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் அறிவித்துள்ளார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி, மெலிண்டா பிரெஞ்ச். இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டில், பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை துவக்கினர்.தற்போது இந்த அறக்கட்டளையில், இணை தலைவராக இருக்கும் மெலிண்டா தன் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமா, ஜூன் 7 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான தொண்டுகளை மேற்கொள்வதற்கு, அவருக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை