உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமலாகிறது புதிய தொலைதொடர்பு சட்டம்

அமலாகிறது புதிய தொலைதொடர்பு சட்டம்

புதுடில்லி:புதிய தொலைதொடர்பு சட்டத்தின் கீழ், அவசர காலங்களில் அனைத்து தொலைதொடர்பு சேவைகளையும், அரசு கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.தொலைதொடர்பு சட்டம் 2023, வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இச்சட்டத்தின் கீழ், பேரிடர் போன்ற அவசர காலங்களில் நிகழும் குற்றங்களை தடுப்பதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அரசு எந்தவொரு தொலைதொடர்பு சேவையையோ அல்லது நெட்வோர்க்கையோ, அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சட்டம் அமலுக்கு வந்த பின், யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டு திட்டம், டிஜிட்டல் பாரத் நிதியாக மாற்றம் காணும். இதன் வாயிலாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் முன்னோடி திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி