உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

புதுடில்லி:வெங்காய ஏற்றுமதிக்கான தடையை, மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையாக, டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலரை நிர்ணயம் செய்துள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில், டிசம்பர் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 8ம் தேதியன்று, வெளியிட்ட அறிவிப்பில், நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீட்டிக்கப்படுவதாக அரசு குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், நேற்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வெங்காய ஏற்றுமதிக்கான தடையை அரசு நீக்கியுள்ளது. மேலும், வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையாக டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 45,650 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.* வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி* ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை: 45,650 / டன்* 2023 - 24ல் வெங்காய உற்பத்தி எதிர்பார்ப்பு: 255 லட்சம் டன்* முந்தைய ஆண்டில் உற்பத்தி: 302 லட்சம் டன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ