உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தனிநபர் கடன் மதிப்பு டிச., காலாண்டில் உயர்வு

தனிநபர் கடன் மதிப்பு டிச., காலாண்டில் உயர்வு

மும்பை:கடந்த டிசம்பர் காலாண்டில், தனிநபர் கடன் மதிப்பு, புதிய உச்சத்தை எட்டியதாக, கடன் தகவல் நிறுவனமான 'கிரிப் ஐ மார்க்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பற்ற கடன்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், தனிநபர் கடன்கள், கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், மதிப்பின் அடிப்படையில், 2.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக் கடன் பிரிவில் கடன்கள் அதிகரித்துள்ளது. 35 லட்சம் ரூபாய்க்கும் மேலான வீட்டுக் கடன்களுக்கான தேவை உயர்ந்துள்ளது. காலம் தனிநபர் கடன்களின் மதிப்பு(ரூபாய் லட்சம் கோடியில்)அக். - டிச., 2021 1.63அக். - டிச., 2022 2.05அக். - டிச., 2023 2.32


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை