உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எஸ்.பி.ஐ., டெபிட் கார்டுகளின் பராமரிப்பு கட்டணம் உயர்கிறது

எஸ்.பி.ஐ., டெபிட் கார்டுகளின் பராமரிப்பு கட்டணம் உயர்கிறது

புதுடில்லி:எஸ்.பி.ஐ., அதன் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்தை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்துகிறது.'கிளாசிக், சில்வர், குளோபல் மற்றும் கான்டாக்ட்லெஸ்' டெபிட் கார்டுகளுக்கு, தற்போது நிலுவையில் உள்ள ஆண்டு பராமரிப்பு கட்டணம், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக, பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த கார்டுகளுக்கு, தற்போதுள்ள கட்டணத்திலிருந்து 75 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும் என தெரிகிறது.இதேபோல், 'யுவா, கோல்டு, காம்போ, பிளாட்டினம் மற்றும் பிரைட் ப்ரீமியம் பிஸ்னஸ்' டெபிட் கார்டுகளின் ஆண்டு பராமரிப்பு கட்டணமும், வரும் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ