| ADDED : ஆக 17, 2024 11:32 PM
சென்னை:முதலீட்டாளர்களையும், முதலீடு தேவைப்படும் நிறுவனங்களையும் இணைக்கும், தமிழக அரசின் 'டேன்பண்ட்' தளத்தில், இதுவரை 3,500 புத்தொழில் நிறுவனங்களும்; 250 முதலீட்டாளர்களும் பதிவு செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய, பல பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஆனால், அவற்றின் விபரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தெரிவதில்லை. எனவே, முதலீடு தேவைப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும், முதலீட்டாளரையும் இணைக்க, 'TANFUND' எனப்படும் முதலீட்டாளர் இணைப்பு தளம், இந்தாண்டு ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் துவக்கப்பட்டது. அதில், இதுவரை 250 முதலீட்டாளர்கள்; 3,500 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கான 30 சதவீத 'ஏஞ்சல்' வரி ரத்து செய்யப்பட்டது. இதனால், பல நிறுவனங்களும் ஸ்டார்ட்அப்களில் அதிக முதலீடு செய்ய விரும்புகின்றன. எனவே, டேன்பண்ட் தளம் வாயிலாகவும், நிறுவனங்களுக்கு அதிக முதலீடுகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசின், 'டேன்பண்ட்' தளத்தில், 3,500 புத்தொழில் நிறுவனங்களும்; 250 முதலீட்டாளர்களும் பதிவு செய்துள்ளனர்