உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  7.20% வளர்ச்சி சாத்தியம்

 7.20% வளர்ச்சி சாத்தியம்

வரும் நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி 6.80 முதல் 7.20 சதவீதமாக இருக்கும் என்ற பொருளாதார ஆய்வறிக்கையின் கணிப்பு, எட்டக்கூடியது தான் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

நா ட்டின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ், நிலையான முன்னேற்றத்தை பிரதிபலித்து வருவதை ஆய்வறிக்கை உறுதி செய்கிறது என, பிரதமர் மோடி கூறியுள்ளார். வலுவான பொருளாதார அடிப்படை, நீடித்த நிலையான வளர்ச்சி, புதுமை படைப்புகள் விரிவாக்கம், தொழில்முனைவு மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை நிச்சயம் வளர்ச்சியை அதிகரிக்கும் என, அவர் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jtxvumtv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆனந்த் மஹிந்திரா

து ணிச்சலான, நேர்மறையான பார்வை கலந்து, இந்த பொருளாதார ஆய்வறிக்கை எதிர்காலத்தை கணித்திருக்கிறது என, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். நிஜமான மதிப்பீடுகள், பொருளாதார அபாயங்களை வெளிப்படையாக கூறியுள்ளது; 10 லட்சத்துக்கு மேல் மக்கள் வசிக்கும் நகரங்களுக்கு 20 ஆண்டு கால திட்டங்கள் தேவைப்படுவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.

ரும்கி மஜும்தார்

இ ந்தியா நிர்ணயித்துள்ள 7.20 சதவீத வளர்ச்சி இலக்கு அடையக்கூடியது தான் என டெலாய்ட் நிறுவன பொருளாதார நிபுணர் ரும்கி மஜும்தார் தெரிவித்துள்ளார். ஐ.எம்.எப்., உலக வங்கி ஆகியவற்றின் கணிப்பை தாண்டி, ஜி.டி.பி., வளர்ச்சியை கணித்திருந்தாலும், உற்பத்தி, நுகர்வு துடிப்புடன் இருப்பதால், இந்தியாவின் நம்பிக்கை சரியானதுதான் என்று அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை