உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் வீடு வாங்குவதைவிட அமெரிக்காவில் வாங்குவது லாபம் சமூக வலைதள பதிவால் கிளம்பிய விவாதம்

இந்தியாவில் வீடு வாங்குவதைவிட அமெரிக்காவில் வாங்குவது லாபம் சமூக வலைதள பதிவால் கிளம்பிய விவாதம்

புதுடில்லி:இந்தியாவில் கட்டுமான நிறுவனங்கள் வீடுகளுக்கு நிர்ணயிக்கும் விலை, பெரும் மோசடியானது என ஒருவர் பதிவிட்ட கருத்துக்கு, பலரும் கலவையான பதில்களை அளித்துள்ளனர்.குர்ஜோத் அலுவாலியா என்ற இளைஞர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், மூன்று மில்லியன் டாலர் அல்லது 25 கோடி ரூபாய் விலையில், வீட்டை குருகிராமில் வாங்குவீர்களா, அல்லது நியூயார்க்கில் வாங்குவீர்களா எனக் கேட்டுள்ளார். அத்துடன் இரண்டு இடங்களையும் ஒப்பிட்டுஉள்ளார். கேள்விகுருகிராமில் வெறும் நான்கு படுக்கையறை வீடு இந்த விலையில் விற்கப்படும் நிலையில், நியூயார்க், மன்ஹாட்டனில் ஆறு படுக்கையறை கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பின் உச்சி வீடான 'பென்ட்ஹவுஸ்' கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். குருகிராமில் 'டி.எல்.எப்., மக்னாலியாஸ்' அடுக்குமாடி குடியிருப்பில் 5,000 சதுர அடி வீட்டின் விலை 25 கோடி எனக் கூறியுள்ள குர்ஜோத், நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடத்தைக் காணும் வகையிலான அமெரிக்க வீடு, இதே விலையில் கிடைப்பதாக கூறியுள்ளார். எனவே, இந்தியாவில், வீடுகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் வரைமுறையின்றி விலை நிர்ணயிப்பதாகவும், ஒரே விலையில், இந்தியாவிலும் நியூயார்க்கிலும் வீடு கிடைத்தால், நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மோசடிஇதற்கு பதிலளித்துள்ளவர்களில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரமும் ஒருவர். இந்தியாவில் மோசமான கட்டமைப்பு வசதிகள் கொண்ட குடியிருப்புகளுக்கும் அதிக விலை நிர்ணயிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.குருகிராமை விட நியூயார்க் பாதுகாப்பானதா என கேள்வி எழுப்பியுள்ள ஒருவர், நியூயார்க்அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு ஆண்டுக்கு, சில லட்சம் டாலர் சொத்து வரியும் குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு மாதம் ஆயிரக்கணக்கான டாலர் கட்டணமும் செலுத்த வேண்டும்.எனவே, ரியல் எஸ்டேட் என்பது எங்கு இருந்தாலும் மோசடியே என அவர் முடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை