உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அதானி பவர் மூலதன செலவு ரூ.2 லட்சம் கோடி

 அதானி பவர் மூலதன செலவு ரூ.2 லட்சம் கோடி

புதுடில்லி: அதானி பவர் நிறுவனம், அடுத்த ஐந்து நிதியாண்டுக்குள் 2 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவினம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் தொடர்பான இலக்கையும் இந்நிறுவனம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2029 - 2030 க்குள் 30.67 ஜிகாவாட் நிறுவப்பட்ட அனல்மின் திறனை எட்ட இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில், 2031 - 32 நிதியாண்டுக்குள் 41.87 ஜிகாவாட் திறனை எட்ட வேண்டும் என இலக்கை மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் 18.15 ஜிகாவாட்டாக உள்ளது. இந்நிறுவனம், உ.பி., பீஹார், மத்திய பிரதேசம், அசாம் மாநிலங்களில் மின் வினியோக திட்டங்களை நடப்பாண்டில் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை