உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அக்ரி இன்டெக்ஸ் 2025: விவசாயிகள் ஆர்வம்

அக்ரி இன்டெக்ஸ் 2025: விவசாயிகள் ஆர்வம்

கோவை:கோவை, கொடிசியா வளாகத்தில், 'அக்ரி இன்டெக்ஸ் 2025' கண்காட்சி, கடந்த 10ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.மண் துவங்கி, விதை, நாற்று, நடவு, இயந்திரம், தொழில்நுட்பம், மானியம், கடனுதவி, மதிப்புக் கூட்டல் அவற்றை விற்பனை செய்வது வரை வேளாண்மை, தோட்டக்கலை கால்நடை, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு என, துறைசார்ந்த அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் காணும் வகையில், 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி அமைந்திருப்பது விவசாயிகளிடம் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.உள்நாட்டின் இயற்கை விவசாயம் முதல் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ரக இயந்திரங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் காண்பிக்கப்படுகிறது. 450க்கும் மேற்பட்ட வெளி மாநில, வெளி நாட்டு நிறுவனங்கள் 600 ஸ்டால்கள் அமைத்துள்ளன.

வங்கிக்கடன், மானியம்

பசுமைக் குடில், நெல் நடவு இயந்திரம், சொட்டு நீர் போன்றவற்றுக்கு பல்வேறு அரசுத் திட்டங்கள் வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் பயனடையும் வகையிலான 5.5 ஹெச்.பி., திறன் கொண்ட, இரண்டு சக்கரங்கள் மட்டும் உள்ள, நெல் நாற்று நடவு இயந்திரங்கள் சுமார் 3.7 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு, வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் ட்ரோன்கள் போன்றவற்றுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி