உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க மென்பொருள் நிறுவனம் மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்

அமெரிக்க மென்பொருள் நிறுவனம் மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்

சென்னை:மின்சார வாகனத் தயாரிப்பு துறையில், புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் மற்றும் சி.ஏ.ஏ.ஆர்., உடன் ஆல்ட்டேர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான ஆல்ட்டேர் இன்ஜினியரிங், உயர் செயல்திறன் கணினி, தரவு பகுப்பாய்வுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ஐ.ஐ.டி., மெட்ராஸ் வளாகத்தில் சி.ஏ.ஏ.ஆர்., எனப்படும் மேம்பட்ட வாகனத் தயாரிப்பு சிறப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம், மேம்பட்ட மின்சார வாகனங்கள், தானியங்கி அமைப்புகள் மற்றும் மிக குறுகிய காலத்தில் நீடித்த வாகனங்கள் தயாரிப்பு ஆகியவற்றில், தொழில்நுட்ப தீர்வுகளை அளிப்பதன் வாயிலாக, இந்தியாவை, வாகனத் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக மாற்றுவதில் உதவும் என, கூறப்பட்டு உள்ளது. இது குறித்து சி.ஏ.ஏ.ஆர்., அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:ஆல்ட்டேர் உடனான ஒப்பந்தம், கல்வி நிலையங்களில் கண்டறியப்படும் புதுமையான ஆராய்ச்சி முடிவுகளை, தொழில்துறையில் நடைமுறைப்படுத்தும் எங்களின் நோக்கத்தை விரைவுப்படுத்தும் முக்கியமான முயற்சி ஆகும். உயர் மதிப்பு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கவும், இந்த ஒப்பந்தம் உதவி புரியும்.இவ்வாறு அவர் கூறினார்.மின்சார வாகன தயாரிப்பு துறையில் புதிய தொழில் நுட்பங்களுக்காக, ஐ.ஐ.டி., மெட்ராஸ் உடன் ஆல்ட்டேர் இன்ஜினியரிங் ஒப்பந்தம் செய்துஉள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை