மேலும் செய்திகள்
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
23 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
23 hour(s) ago
பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.40 வேண்டும்
23 hour(s) ago
புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி 8 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்படுத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் பிறகு, இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த நிதியாண்டான 2024 - 25ல், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, இந்தியாவின் அன்னிய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் நிலவும் இடைவெளியை குறைப்பதில் உதவிஉள்ளது. மேலும், வரும் ஜனவரி 1 முதல், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆஸ்திரேலிய வரி முற்றிலும் பூஜ்யமாக உள்ளது. இதன் வாயிலாக, கூடுதல் வரி ஏதுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும். ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் அமலாக உள்ள நிலையில், புதிதாக பல துறைகளுக்கும் ஏற்றுமதி வாய்ப்புள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஒப்பந்தம் ஏற்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சி, ஆழமாக சந்தையை அணுக வாய்ப்பு, வலிமையான வினியோக தொடர் ஆகியவற்றால் இந்திய ஏற்றுமதியாளர்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பயன் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மூன்று ஆண்டுகளுக்கு முன், பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய ஏற்றுமதி 8 சதவீதம் அதிகரிப்பு.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago