உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கே.டி.எம்., நிறுவனத்தை ரூ.7,765 கோடிக்கு வாங்கிய பஜாஜ்

 கே.டி.எம்., நிறுவனத்தை ரூ.7,765 கோடிக்கு வாங்கிய பஜாஜ்

புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பைக் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் கே.டி.எம்., நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 7,765 கோடிக்கு வாங்கி, அதன் முழுக்கட்டுப்பாட்டை பெற்று உள்ளது. ஆஸ்திரிய நிறுவனமான கே.டி.எம்., மில் 49.9 சதவீதப் பங்குகளை பஜாஜ் வைத்திருந்தது. இந்நிலையில், பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்த விரும்பிய பஜாஜ், கடனுதவி வாயிலாக நிதி திரட்டியது. பங்குகளை வாங்கும் நடவடிக்கைக்கு 9 ஒப்புதல்களை பஜாஜ் பெற வேண்டியிருந்த நிலையில், 8 ஒப்புதல்கள் இம்மாத தொடக்கத்தில் பெறப்பட் டு விட்டன. மீதமுள்ள ஒரு ஒப்புதலும் 10ம் தேதி கிடைத்ததை அடுத்து கையகப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. இதற்காக ஐரோப்பிய யூனியனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ