உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு

ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு

கம்பம்:சர்வதேச அளவில் இந்தியா, கவுதமாலா நாடுகளில் ஏலக்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாக, கவுதமாலா ஏலக்காய் உள்ளது. தரத்தில் சிறந்ததாக இந்திய ஏலக்காய் இருந்தாலும், விலை குறைத்து கொடுப்பதால், கவுதமாலா ஏலக்காயால் இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு சிக்கல் ஏற்படுகிறது.நடப்பாண்டு வானிலை மாற்றங்கள் காரணமாக, இந்திய ஏலக்காய் உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அழுகல், பூஞ்சான் நோய்கள் தாக்கி உள்ளன.ஏலக்காய் சாகுபடி ஆலோகர் அன்பழகன் கூறியதாவது:இந்திய ஏலக்காய் உற்பத்தி நடப்பாண்டு 15,000 முதல் 18,000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் சராசரி விலை கிலோவுக்கு, 1,650 ரூபாயில் இருந்து, தற்போது 2,950 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரும் 2025 ஏப்ரலில் விலை கிலோ 3,500 ரூபாய் வரை உயரலாம். இந்தியாவுக்கு போட்டியாக விளங்கும் கவுதமாலாவில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்கும் நடப்பாண்டு மகசூல் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் உற்பத்தி பாதிப்பு இருந்தாலும், இந்திய ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்திய ஏலக்காய்க்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ