உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐ.டி.ஆர்., - 3 படிவத்தில் மாற்றம்

ஐ.டி.ஆர்., - 3 படிவத்தில் மாற்றம்

புதுடில்லி:வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் ஈட்டும் தனிநபர், இந்து கூட்டுக்குடும்பத்தினர் தாக்கல் செய்யும் வருமான வரித்தாக்கல் படிவம் 3ல், சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.இதன் வாயிலாக, நீண்டகால மூலதன ஆதாயங்களைக் கொண்ட தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தினர் வருமான வரித்தாக்கல் செய்வது எளிதாகியுள்ளது. கடந்த பட்ஜெட்டில், ரியல் எஸ்டேட் மீதான நீண்டகால மூலதன ஆதாய வரியை, குறியீட்டுடன் 20 சதவீதமாகவும்; குறியீடு இல்லாமல் 12.50 சதவீதமாகவும் குறைக்க அரசு முன்மொழிந்தது. இதன் வாயிலாக, கடந்த 2024 ஜூலை 23ம் தேதிக்கு முன் வீடுகளை வாங்கிய தனிநபர்கள் அல்லது இந்து மத கூட்டுக்குடும்பத்தினர் எளிதாக வரி செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ