உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்

சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்

கடந்த 2026 ஜுன் – செப்., வரையிலான மூன்றாவது காலாண்டில் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக வெஸ்டியன் எனும் ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவன ஆய்வறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜன., முதல் செப்., வரையிலான ஒன்பது மாதங்களில் நாட்டில் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 3.26 கோடி சதுர அடி அளவிலான சேமிப்பு கிடங்குகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் இத்துறை வாயிலாக கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கிடங்கு பயன்பாடு – சென்னை (ச.அடி லட்சத்தில்): 2025 | 11.302026 | 28.90 (156% உயர்வு) முண்ணனி நகரங்கள்: நகரம் : பரப்பளவு (ச.அடி லட்சத்தில்) மும்பை : 27.00 புனே : 22.00 டெல்லி : 12.70 பெங்களூரு : 7.10 ஹைதராபாத் : 6.80 துறை வாரியான பங்கு (%) சரக்கு போக்குவரத்து : 29 உற்பத்தி துறை : 23 ஆட்டோமொபைல் : 14 இதர : 34 (2026 ஜுன் – செப்., வரையில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி