உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சமையல் எண்ணெய் இறக்குமதி 16சதவிகிதம் சரிவு

சமையல் எண்ணெய் இறக்குமதி 16சதவிகிதம் சரிவு

புதுடில்லி:பாமாயில், சூரியகாந்தி, சோயா உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த மார்ச் மாதம் 16 சதவீதம் குறைந்து 9.98 லட்சம் டன்களாக உள்ளது என, சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொழிற்கூட்டமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் உண்ணக்கூடிய, உணவுக்கு அல்லாத தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மார்ச் மாதம் 9.98 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டு இதே மாதத்தில் 11.82 லட்சமாக இருந்தது. இதேபோன்று மார்ச்சில், சமையல் எண்ணெய் இறக்குமதி 9.71 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 11.50 லட்சம் டன்னாக இருந்தது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மார்ச்சில் 1.91 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. மேலும், உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதியும் 32,471 டன்னில் இருந்து 27,742 டன்னாக குறைந்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டு என்பது நவம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது. 2024 நவ., - 2025 மார்ச் வரை சமையல் எண்ணெய் இறக்குமதியில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் 6.63 லட்சம் டன் கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி 48.79 லட்சம் டன்னில் இருந்து 49.77 லட்சம் டன்னாக அதிகரித்திருந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி