உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரிசி ஏற்றுமதிக்கு புதிய நடைமுறை வகையின் அடிப்படையில் வரி விதிப்பு மே முதல் அமல் என வர்த்தக துறை அறிவிப்பு

அரிசி ஏற்றுமதிக்கு புதிய நடைமுறை வகையின் அடிப்படையில் வரி விதிப்பு மே முதல் அமல் என வர்த்தக துறை அறிவிப்பு

புதுடில்லி,:அடுத்த மாதம் முதல், அரிசி ஏற்றுமதிக்கு புதிய வரிவிதிப்பு நடைமுறையைக் கொண்டுவர உள்ளதாக, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் கீழ், அரிசியின் வகை மற்றும் பதப்படுத்தப்படும் தன்மையைப் பொறுத்து வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதாவது, பதப்படுத்தும் முறையைப் பொறுத்தவரை, புழுங்கல் அரிசி புழுங்கல் அல்லாதது என்றும், வகைப்படுத்தலைப் பொறுத்தவரை பாஸ்மதி, பாஸ்மதி அல்லாதது மற்றும் புவிசார் குறியீட்டுப் பதிவேட்டால் அங்கீகரிக்கப்பட்ட அரிசி என்ற அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புவிசார் குறியீடு பெற்ற 20 அரிசி வகைகள், இதன் வாயிலாக பயன்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலகளவில் அதிகமாக வாங்கப்படும், இந்தியாவின் உயர்தர மற்றும் மண்டல ரீதியிலான அரிசி வகைகள், குறிப்பாக பாஸ்மதி மற்றும் புவிசார் குறியீடு பெற்ற அரிசி வகைகளை, கண்காணிக்கவும் ஊக்குவிக்கவும் இந்த புதிய நடைமுறை வழிவகுக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி தரவுகளை ஒழுங்குபடுத்தவும்; அரிசி வகைகளின் வேறுபாட்டை மேம்படுத்தவும், உயர்தர அரிசி வகைகளை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு அதிக விலை பெற்றுத் தருவதற்கும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை