உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீன உருக்கு இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலை

சீன உருக்கு இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலை

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனாவில் இருந்து மேற்கொள்ளும் உருக்கு இறக்குமதி, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்ற அரசின் தற்காலிக தரவுகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கச்சா உருக்கு உற்பத்தியாளரான இந்தியாவின், நிறைவுபெற்ற உருக்கு மொத்த இறக்குமதி, எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்சமாக இருந்தது. இதையடுத்து இந்த காலகட்டத்தில், இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இந்தியா 65 லட்சம் டன் நிறைவுபெற்ற உருக்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26.60 சதவீதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில், சீனா 19.60 லட்சம் டன் உருக்கை, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 22.80 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து இறக்குமதி அதிகரித்து வருவதால், கட்டுப்பாடற்ற இறக்குமதியை குறைக்கும் விதமாக, 25 சதவீதம் வரை தற்காலிக வரி விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை