உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  டி.டி.கோனெக்ஸ் ரூ.200 கோடி முதலீடு

 டி.டி.கோனெக்ஸ் ரூ.200 கோடி முதலீடு

சென்னை:தமிழகத்தில், சிங்கப்பூர் நாட்டின் டி.டி.கோனெக்ஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த டி.டி.கோனெக்ஸ் நிறுவனத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ஆலை உள்ளது. இந்நிறுவனம், 'பிரிசிசியன் பார்ட்ஸ்' எனப்படும் துல்லிய பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 'ஆப்பிள்' நிறுவனத்துக்கு முக்கிய வினியோகஸ்தராக உள்ளது. தற்போது, டி.டி.கோனெக்ஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரகடத்தில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம், 20 ஏக்கர் நிலத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை