உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிலுவை தொகைக்கான காலக்கெடு: 45 நாட்களாக தொடர கோரிக்கை

நிலுவை தொகைக்கான காலக்கெடு: 45 நாட்களாக தொடர கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெரு நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற கட்டண விதியில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர வேண்டும் என, இந்திய தொழில்துறை அமைப்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை வலியுறுத்தி உள்ளது.கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பெரு நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும்; இல்லையெனில் அதை வரிக்கு உட்பட்ட வருவாயிலிருந்து கழித்துக்கொள்ள முடியாது என்றும், அத்துடன் கூடுதல் வருமான வரி செலுத்த நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த ஏற்பாடு, பெரு நிறுவனங்கள் பணம் செலுத்தும் காலக்கெடுவைக் கடைப்பிடிக்க சிறந்த வாய்ப்பாக இருப்பதால், இதை தொடர வேண்டும் என சேம்பர் கோரியுள்ளது.ஆனால் சிறு நிறுவனங்கள் தரப்பில் ஒருசிலர், இந்த காலக்கெடுவால் முன்கூட்டியே ஆர்டர் வழங்குவதை பெரு நிறுவனங்கள் குறைத்துக் கொள்வதால், இந்த விதியை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை