உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  டீசலை போல மின்சார லாரி செலவும் குறையும்

 டீசலை போல மின்சார லாரி செலவும் குறையும்

சென்னை, ஜன. 22- மின்சார லாரிகள், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், டீசல் லாரிகளை போல, செலவு குறைந்ததாக மாறும் என டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரிஷ்வா தெரிவித்துள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 7 முதல் 55 டன் பிரிவில், 17 லாரி மாடல்களை ஒரே நாளில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், மூன்று மின்சார லாரிகள் ஆகும். இதுகுறித்து அவர் கூறுகையில், “டீசலை விட, மின்சாரம் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதனால், மின்சார லாரிகள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் லாபத்தை அதிகரிக்கும். மின்சார லாரிகளை மட்டுமே விற்பனை செய்யாமல், இதற்கு தேவையான சார்ஜிங் கட்டமைப்பு, நிதி உதவி, வாழ்நாள் பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்குகிறோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை