உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / குறுந்தொழில் கிளஸ்டர் திட்டத்தில் குடும்ப முறைகேடு நடப்பதாக புகார் தடுக்க தொழில்முனைவோர் கோரிக்கை

குறுந்தொழில் கிளஸ்டர் திட்டத்தில் குடும்ப முறைகேடு நடப்பதாக புகார் தடுக்க தொழில்முனைவோர் கோரிக்கை

சென்னை:குறுந்தொழில் நிறுவனங்கள் பயன் பெறுவதற்கு, அரசு மானியத்துடன் அமைக்கப்படும், பொது வசதி மையங்களை, முறைகேடான வகையில், சில குடும்பத்தினரே பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், குறைந்த முதலீட்டில் துவங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு இயந்திர, தளவாடங்களை வாங்க இயலாத நிலையில், ஒரு இடத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து கிளஸ்டர் அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 அல்லது அதற்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய இத்தகைய கிளஸ்டர்களுக்கு தேவைப்படும் இயந்திர தளவாடங்களுக்காக, பொது வசதி மையத்தை 75 - 80 சதவீதம் வரை நிதி செலவிட்டு அரசு அமைக்கிறது. மீதி 20 சதவீதம் வரை கிளஸ்டரில் உள்ள நிறுவனங்கள் ஏற்கின்றன.சில குறுந்தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், உறவினர்கள் பெயரில் போலி நிறுவனங்களை துவக்கி, அரசிடம் நிதி பெற்று, பொது வசதி மையத்தை ஏற்படுத்துகின்றனர். அதை, அந்த பகுதியில் அதே தொழிலில் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்காமல், தங்கள் நிறுவனத்துக்கானதாக ஏகபோகமாக பயன்படுத்துகின்றனர்.மேலும், போலி நிறுவனங்களைக் காட்டி, பொது வசதி மையம் அமைக்க அரசிடம் நிதி பெறுவதிலும் முறைகேடு நடக்கிறது. எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் தனிக்குழு அமைத்து, கிளஸ்டரில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில் பதிவு விபரங்களையும் சரிபார்க்க வேண்டும். புதிதாக கிளஸ்டர் அமைக்க பெறப்பட்டு உள்ள விண்ணப்பங்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி