உயிர் பெறும் பொம்மைகள் தயாரிப்பு டில்லியில் கண்காட்சி துவக்கம்
புதுடில்லி: டில்லி பாரத் மண்டபத்தில் 16வது பொம்மைகள் வணிக சர்வதேச கண்காட்சியை, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்.தமிழகம் உட்பட நாடு முழுதிலுமிருந்து 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு அரங்குகள் அமைத்துள்ளன. கண்காட்சியில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பொம்மைகள், மின்னணு விளையாட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.https://x.com/dinamalarweb/status/1941329887614353868கண்காட்சியில், 'மேட் இன் இந்தியா' என்ற வாசகம், பல ஸ்டால்களில் பளிச்சிடுகின்றன. சீனாவிலிருந்து குவிக்கப்பட்டு வந்த பொம்மைகள் இறக்குமதிக்கு, மத்திய அரசு போட்ட கடிவாளத்தின் பலன் இது என, பார்வையாளர்கள் தெரிவித்தனர். விதவிதமான பொம்மை கள் இடம் பெற்றிருந்தாலும், பொம்மைகள் தயாரிப்புக்கு தேவைப்படும் சாதனங்கள், இயந்திரங்கள் அதிக இடம்பெறாததால் இது, 'பி2பி' எனப்படும் பிசினஸ் டு பிசினஸ் கண்காட்சியாக, பெரிய அளவில் தோற்றமளிக்கவில்லை.வளர்ந்து வரும் முக்கிய துறையாக இருந்த போதும், இன்னும் நாம் செல்ல வேண்டிய துாரம் அதிகமே என்பதை மட்டும் தெளிவாக அறிய முடிந்தது.* பொம்மை வணிகத்தில் இயங்கும் 90 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள், முறைசாரா பிரிவிலேயே இயங்குகின்றன.* பெரும்பான்மையான நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவுக்கு உட்பட்டவையாகவே உள்ளன.* தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோவையில் தான் அதிக பொம்மை நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.விற்பனை அதிகரிக்க காரணம்* உள்நாட்டு பொம்மை உற்பத்தி அதிகரிப்பு * கலாசாரத்தை பறைசாற்றுவதாக இருப்பது* சுற்றுச்சூழலுக்கும், கற்றலுக்கும் உதவும் பொம்மைகள் தேவை அதிகரிப்பு* மக்களின் செலவழிக்கும் திறன் மேம்பட்டுள்ளது * மின்னணு வர்த்தக தளங்கள் அதிகரிப்பால் விற்பனை உயர்வுஉலக பொம்மை சந்தைஇந்தியாவின் பங்கு 0.30 %சீனா 80 % பங்குடன் முதலிடம்அரசின் திட்டங்கள்:* பாரம்பரிய நிறுவனங்களை உயிர்ப்பெற செய்வதற்காக, 'ஸ்புர்தி' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது* பொம்மை உற்பத்தியை அதிகரிக்க பிரத்யேக ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசனை.https://x.com/dinamalarweb/status/1941329385342239047