| ADDED : பிப் 15, 2024 11:25 PM
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில், 3.12 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவித்திருப்பதாவது:இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில், 3.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.12 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டு காலத்தில், இறக்குமதியும் 3 சதவீதம் அதிகரித்து, 4.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதேபோன்று, வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஜனவரியில், 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி 4.89 சதவீதம் சரிந்து, 29.37 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 6.71 சதவீதம் குறைந்து, 46.57 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்த வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால், 'இந்தியா சாதகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது' என கூறினார்.