மேலும் செய்திகள்
துளிகள்
07-Apr-2025
புதுடில்லி:கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 825 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 70.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்பட்ட முதற்கட்ட மதிப்பீட்டில், ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 69.78 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 70.12 லட்சம் கோடி ரூபாய் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2023 - 24ம் நிதியாண்டின் 66.14 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும். சேவைகள் துறை ஏற்றுமதி கணிசமாக அதிகரித்ததே, ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த நிதியாண்டில் சேவைகள் துறை ஏற்றுமதி 13.60 சதவீதம் வளர்ச்சியடைந்து, 32.94 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தமிழகத்தில் இருந்து, 2024 - 25ல் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 52 பில்லியன் டாலர் அதாவது, 4.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் ஏற்றுமதியில் குஜராத், மஹாராஷ்டிராவுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் இருந்து, 2024 - 25ல் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, அதாவது, 4.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 3.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
07-Apr-2025