உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம்: இறக்குமதியை அனுமதிக்க கோரிக்கை

 மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம்: இறக்குமதியை அனுமதிக்க கோரிக்கை

ஹைதராபாத்:மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள இறக்குமதியை அனுமதிக்குமாறு, மத்திய அரசிடம் கோழிப்பண்ணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஹைதராபாதில் நடைபெற்று வரும் 17வது இந்திய கோழிப்பண்ணை கண்காட்சியில் அத்துறையினர் தெரிவித்ததாவது: கோழிப்பண்ணை தொழிலுக்கு மக்காச்சோளமும், சோயாவும் முக்கியமான மூலப்பொருட்கள். அதேபோல, எத்தனால் தயாரிப்புக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு 4.20 கோடி டன் மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. இதில் எத்தனால் தயாரிப்பு துறைக்கு மட்டும் 1.20 - -1.50 கோடி டன் அளவுக்கு தேவை இருக்கிறது. கோழிப்பண்ணை துறையின் தேவை 2.50 கோடி டன். எத்தனால் உற்பத்தி துறையின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதால், மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. கோழித்தீவன உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் பிரேசில், தாய்லாந்து போன்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் நம்மால் போட்டியிட முடிவதில்லை. இந்த பிரச்னையை சமாளிக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள இறக்குமதியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் சப்ளை பிரச்னை சரியாவதுடன் விலை நிலவரமும் சமன் அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கோழிப்பண்ணை துறையில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பணிபுரிகின்றனர் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள துறையில் ஏற்றுமதி குறைவு வெளிநாடுகளில் ரோடு ஷோ நடத்தி ஏற்றுமதி வளர்ச்சிக்காண அரசின் உதவி தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை