உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்துடன் இணைந்து பணியாற்ற ஜெர்மனி உறுதி

தமிழகத்துடன் இணைந்து பணியாற்ற ஜெர்மனி உறுதி

சென்னை: “தமிழகத்துடன் உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் திறன் மேம்பாடு, பசுமை மின் திட்டங்கள், 'செமி கண்டக்டர்' உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உள்ளோம்,” என, ஜெர்மனியின் சாக்சோனி மாகாண அமைச்சர் டிர்க் பான்டர் தெரிவித்தார். தென்மாநில வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சோனி மாகாணம் இணைந்து, தமிழகம் - சாக்சோனி வணிக மாநாட்டை, சென்னையில் நேற்று நடத்தின. அதில், சாக்சோனியின் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டிர்க் பான்டர் கூறியதாவது: இயந்திர பொறியியல், துல்லிய உற்பத்தி, நுண் மின்னணுவியல் ஆகியவற்றில் ஆழமான பலங்களுடன் சாக்சோனி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான உலகளாவிய மையமாக திகழ்கிறது. ஐரோப்பிய நாடுகள் முழுதும் மின் வாகனங்களில் பயன்படுத்தப்படும், 'சிப்'களில் மூன்றில் ஒரு பங்கை சாக்சோனி வழங்குகிறது. தமிழகத்துடனான உறவை மேலும் வலுப்படுத்த திறன் மேம்பாடு, தொழில் பூங்காக்கள், செமிகண்டக்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இணைந்து செயலாற்ற உள்ளோம். ஜெர்மனியில் இருந்து, 400 மில்லியன் யூரோ, அதாவது கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து, 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ